வரும் வழியில் உன்னை நினைத்துக்கொண்டே வந்தேன் !
மனதில் மகிழ்ச்சி பொங்கியது ...
ஒவ்வொரு முறை உனை பார்க்க வரும்போதெல்லாம் ;
மனதில் நிகழும் மாற்றங்கள்...
கடைசியாக உனை எப்பொழுது பார்த்தேன் ??!!
சரியாக சொல்ல வேண்டுமென்றால் ...!
நேற்று உன் கைகளை பிடித்து ஆடிக்கொண்டே வந்தேனா...??!
நினைவிற்கு வந்து எனை தனிமையில் சிரிக்க வைத்தது ..!!
சிக்னலுக்காக நின்றிருந்த என்னருகே இருந்தவர் எனை வித்யாசமாய் நோக்க ....
நான் ஏன் இப்படி மாறிப்போனேன் ...!!
Monday, April 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment