நட்பெனும் அழகோவியம் !
சந்தேகமெனும் ஆயுதம் !
பரிவெனும் நெஞ்சம் !
என்றென்றும் ஏங்கும் !
அறிந்தாலும் பிரிவோம் !
என்றேனும் சந்திப்போம் !
இதயம் புரியும் !
நட்பெனும் அழகோவியம் !
சந்தேகமெனும் ஆயுதம் !
பரிவெனும் நெஞ்சம் !
என்றென்றும் ஏங்கும் !
அறிந்தாலும் பிரிவோம் !
என்றேனும் சந்திப்போம் !
இதயம் புரியும் !
விரல் சொடுக்கும் கணம் !
உரைத்தேன் என் மனதின் கனம் !
மறைத்தால் மன்னிக்காது என் மரணம் !
உணர்ந்து பிரிந்தால் போதும் என்ற மனம்!
உரைத்தது ஏன் என்றே துடிக்குது கணமும்
மனதில் உன் முகம் !
விரலில் உன் ஸ்பரிசம் !
நினைவில் உன் புன்னகை !
கண்களில் உன் உருவம் !
நினைத்து நினைத்து பார்க்கும் ;
உணரவில்லை உன் பிரிவை !
எனது நெஞ்சம் எப்போதும் என்னோடு நீ !! ....
உயிர் பிரியும் நேரம் !
உன் அருகாமை வேண்டும் !
தூர நின்று பார்ப்போயோ !?
தோளில் தாங்கி துடிப்பாயோ !?
உனக்குள் நான் ! எனக்குள் நீ ! யாரறிவார்?!!
உடல் சிலிர்க்கும் உனை நினைத்தால்!
கனவு துளிர்க்கும் உனை நினைத்தால்!
புன்னகை மிளிரும் உனை நினைத்தால்!
உனை நினைத்துக்கொண்டே இருந்தால்!
உலகமே என் இமைக்குள் சுழலும்!
மனதில் காதல் வளர்த்து!
கண்களில் ஏக்கம் வளர்த்து!
வார்த்தைகளில் இதம் வளர்த்து!
உணர்வுகளை கூற உன்னருகே நான் வர!
புன்னகையுடன் அழைத்தாய் உன் திருமணத்திற்கு!