தனித்திருக்கும் இரவுகளில்...
நீளும் உன் நினைவுகள்...
இழுத்தணைத்த கரங்களில் விடுபடாமலேயே சிணுங்கும் நீ !
காதோரம் உரசும் செவ்விதழ்களை
துரத்திப்பிடித்துமுழுதாய் உனை வரிந்து கொள்ள முயல்கையில்;
எப்படியும் கலைந்து விடுகிறது கனவு...!!
Monday, May 5, 2008
எனக்குள் நீ...
உறவாய் இருப்பாய் என்று நினைக்கவில்லை!
உயிர் பிரியும் நேரத்தில் அருகிலிருப்பாய் என்று நினைக்கவில்லை!
நீங்காது எனது நினைவுகள் உனக்கிருக்கும் என்று நினைக்கவில்லை!
நீளும் பல இரவுகளில் என்னை நட்சத்திரங்களாக பார்ப்பாய் என்று நினைக்கவில்லை!
நான் நினைப்பது;
உனக்குள் நான் இல்லை என்றானாலும், நீ நீயாக இருப்பதையும்!
எனக்குள் நீ எப்போதும் நிறைந்து இருப்பதையும் ...

ஏனிந்த வேறுபாடு ...?
உன்னை நினைக்கும் நொடிகள் ...
மனதிற்குள் ஒரு மயக்கம் !
நீ பேசுவதாய் நினைத்து சிற்சில ஒத்திகைகள் எப்போதும்...
உன்னை ரகசியமாய் எனக்கு வெளிப்படுத்தும் நொடிகள்...
மனதிற்குள் ஒரு மயக்கம் !
நீ அருகே இருப்பாய் என்றெண்ணி காற்றை சிறைபடுத்தும் கைகள் எப்போதும்...
உன்னை அருகில் பார்க்கும்போது மட்டும்...
மயக்கத்தை விடுத்து சிலுப்பி நிற்கின்றதே நன்றிகெட்ட மனம்!
எனையறிந்த மனம்தானே என்ற நினைப்போ...
உன்னை விட்டு தூரமாய் வரும் நொடிகள்...
மறுபடி ஏங்குதே மனம்!
மீண்டும் உனை காணும் நொடிகளை எண்ணி !...

புரிந்துகொள்வாயா..?
புரிந்துகொள்வாயா..? உன் கோபம் எனை தடுமாற வைக்கின்றதை !
புரிந்துகொள்வாயா..? உன் ஸ்பரிசம் எனை எனக்கு உணர வைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் அருகாமையை நான் பொக்கிஷமாய் நினைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் சீண்டல்கள் எனை சிரிக்க வைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் சிறிய பிரிவுகளும் எனை சோகமாக்குவதை !
புரிந்துகொள்வாயா..? உன் வார்த்தைகள் எனக்குள் மாற்றம் உண்டாக்குவதை !
புரிந்துகொள்வாயா..? உன் நட்பு இல்லாமல் போனால் எனக்கு என்னாகும் என்பதை !
Subscribe to:
Posts (Atom)